Tuesday, October 18, 2011

நண்பன்டா....

தஞ்சை வாசன் வாசமிட
இனிதே கொண்டாய் என் நெஞ்சை
நன்செய் பயிர்கள் நாற்றுவிட்டாய்
என்னில நெஞ்சில் - நட்பின்
வேந்தன் கொடி நாட்டிவிட்டாய்.
வாசன் கொடி பசும் முல்லைக்கொடி
என் நரம்புகளாய் படரட்டும் என்னுள்ளே.
..








லோகம் பலவாளும் அரசன்
என்னுலகம் நீயென்று அறிவாயா?
கள்ளர்கள் ஒழித்துக் கட்டும் கரிகாலா
ஒரு களவானி நான்
உன்னுள்ளேயே ஒளிந்திருக்கேன் அறிவாயா?
சிறையில் அடைப்பதென்று நினைத்துவிட்டு
என்னை சொர்க்கத்துள் பூட்டிவைத்தாய்
உன்னுள்ளே.
உன்னிதயம் வாசம் செய்யும் களவானிக்கு
பலஜென்ம ஆயுள் தண்டை அருள்வாயே.

4 comments:

  1. உண்மை நண்பனுக்கு தானே நண்பனா பற்றி தெரியும் ...

    ReplyDelete
  2. @ அரசன்
    @ Thanjai Vasan (தஞ்சை.வாசன்)

    மிக்க நன்றி நண்பர்களே (நண்பன்டா)

    ReplyDelete