பச்சிலை சேலை கட்டி
சூரியப் பொட்டு வைத்து
அழகிய குன்றுகளாம்
சொல்லமுடியாத
அழகுதன்னை
மாராப்பு சரி செய்து
சேவகம் செய்யும்
தென்றலங்கே
மங்கை நீராட
கடலது இருக்கையிலே
சோப்பு நுரை போலே
மேகம் அது கூடுமங்கே
நிலவுப் பெண் குளிக்கையிலே
பள்ளத்தாக்கில் ஒளிந்து கொண்டு
கொஞ்சம் நான் பார்க்க வேண்டும் ..........................
வார்த்தை ஒவ்வொன்றுக்கும்
பூவுதிரும் மலரும்
பார்வை ஒவ்வொன்றுக்கும்
கவிவுதிரும் கனியமுதம்
எழுத்து ஒவ்வொன்றும்
பழுத்த அனுபவமும்
கழுத்து வலியெடுக்க
எழுதும் பலபக்கம்
கண்கள் வலிபிறக்க
படிக்கும் நூலகமே
நொடிக்கு நொடி
என்னிதயம் அது வாழ்த்துகிறது
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நாளை பிறந்தநாள் காணும்
அன்பு நண்பர் தஞ்சை வாசன் அவருக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....
இறைவனின் காவலரே மந்திரப் பாவலரே குணவதியின் கோவலரே மியாவ் மியாவ் நாயகரே சௌமியாவ் மியாவ் நாயகரே கோபத்தின் பெருங்கடலே எரிமலையின் சிறு வுருவே சிங்கத்தின் முகம் சிரிப்பில் ஆனையின் கரம் அணைப்பில் இப்படி சொல்லத்தான் ஆசை எனக்கு - இருந்தும் பொய் சொல்ல முடியலியே உம் பிஞ்சு முகம் பார்க்கையிலே பிஞ்சுக் கொயந்தைக்கு பொறந்தநாள் வாத்துக்கள். நீங்களும் வந்து வாத்துங்கள்..!
உங்கள் சந்தோசம் பெட்ரோல், டிசல், கேஸ் , விலை போல் தினமும் உயரட்டும்...
உங்கள் துன்பங்கள் யாவும்.. உங்கள் செல் பேலன்ஸ் போல் சுத்தமாக இல்லாமல் போகட்டும்..!