Tuesday, October 18, 2011

காதல் பித்தன் ...

மின்னலை 5CM இடைவெளியில் பார்த்தேன்..
நீ பளிச்னே சிரித்தபோது...

உன்னை பற்றி எழுதும் போது பக்கத்து

வீட்டு பெண்கூட வெட்கப்பட்டது...
உனது வர்ணிப்பை பார்த்து...!

தடம்புரளாமல் சென்ற தண்டவாள இரயில் நீ...

உனக்காக சிலை வைக்க சொல்லி
இருக்கிறேன் மவுண்ட்ரோட்டில்...

எப்பொழுதும் சோர்வாக இருக்கும் நீ என்ன.?

பைசாநகர சாய்ந்த கோபுராமா..!

உனது திமிர் ஈபிள் டவரை போல

வளர்ந்து கொண்டே போகிறது...

உனது தரத்தை ஆராய்ந்தால்

ISI
நிறுவனமே ஆடிப்போய்விடும்..
அப்படியோரு அதிசயம் நீ..

அமாவாசை இருட்டிலும் அழகாய் தெரிபவளே ...

எப்பொழுது வருவாய் காதல் என்னும் வெளிச்சத்தில்...

பெண் என்பவள் பூவிற்கு சமமாம்..?

நீ என்ன புயலாய் வீசுகிறாய்..!

சந்தோசமாய் வாழ ஆசைதான் எப்படி...

நீ
இல்லாமல் வாழ்வது?

சின்ன வீடு:

மறைவோரம் பார்த்து கட்டியது
தெருவில் யாரும் பாராத விதம்
கட்டிக் கொள்வேன்
என் சின்ன வீட்டை..

நண்பன்டா....

தஞ்சை வாசன் வாசமிட
இனிதே கொண்டாய் என் நெஞ்சை
நன்செய் பயிர்கள் நாற்றுவிட்டாய்
என்னில நெஞ்சில் - நட்பின்
வேந்தன் கொடி நாட்டிவிட்டாய்.
வாசன் கொடி பசும் முல்லைக்கொடி
என் நரம்புகளாய் படரட்டும் என்னுள்ளே.
..








லோகம் பலவாளும் அரசன்
என்னுலகம் நீயென்று அறிவாயா?
கள்ளர்கள் ஒழித்துக் கட்டும் கரிகாலா
ஒரு களவானி நான்
உன்னுள்ளேயே ஒளிந்திருக்கேன் அறிவாயா?
சிறையில் அடைப்பதென்று நினைத்துவிட்டு
என்னை சொர்க்கத்துள் பூட்டிவைத்தாய்
உன்னுள்ளே.
உன்னிதயம் வாசம் செய்யும் களவானிக்கு
பலஜென்ம ஆயுள் தண்டை அருள்வாயே.

நண்பனாய்:



ரோசா பூலோகம் நானே
ராசா அதில் நீதானே
எனை நேசித்திருப்பாய் என்றெண்ணி
என் சுவாசம் கூட அரபனித்தேன்
கரு முள்ளாய் நீ மாறி
என் நெஞ்சம் அதில் குத்துறியே
என் இதயத்தை பிடுங்கிப் போனாலும்
அப்போதும் நான் உன்னுடனே
நண்பனாய் நான் நண்பனாய்

மௌனம்:



இரவில் பயணம்
எங்கும் கருமை
பல வண்ணங்கள் தெரிவதாய்
ஆயினும் தெரியவில்லை
வண்ணங்கள்
எந்தன் மௌனம்
இதழ்கள் கூட அசையவில்லை
இதயம் மட்டும் பிதற்றிக் கொண்டே
உன்னிடம் பேசாத என் இதழ்கள்
பேசிக்கொண்டே இருக்கும் இதயம்
நான் உன்னை நினைக்க விரும்பவில்லை
நினைக்காமல் இருந்ததில்லை
நான் பைத்தியம்
மௌனமாய்..!
நீ நிலவுதான் பெண்ணே
என் அன்பை எனக்கு பிரதிபலிப்பதே இல்லை
என்னுடன் பெற்றுக் கொண்டாலும்
எல்லோரிடமும் கொடுத்து செல்கிறாய்
என்னை மட்டும் மறந்து செல்கிறாய்.
ஆழம் தெரியாது
விழுந்துவிட்டேன்
கானா பிணமாய்
உன்னுள்ளே
நான்.
கல் அறை
ஆட்சி செய்கிறேன்
கல்லாய் போன
உன் இதயத்தை.