Tuesday, April 17, 2012

பிறந்தநாள் வாழ்த்துக்கள். உமா கணேஷ் ...








கருக்கலில் ஒரு பல்  
சிரிக்கிறது 
தெருக்களில் முதல் வந்த 
விடிவெள்ளி 
மாலையில் விரிந்த மென் 
வடிவல்லி 
விடியல்வரை வெண் பனி 
சுமக்கிறது 
வெண்பனி தின்ற மகன்  
பரிதியவன் 
சுட்டெரிக்கும் வெயில் 
வெள்ளொளியும் 
கண்ணொளி வீசும் உம்மிடம் 
தோற்கிறது 
தினம் தினம் போரிட்டு 
பார்க்கிறது 
மறைவான இடம் தேடி 
ஒளிகிறது 
கதிரவன் தோற்கடிக்கும் 
பெண்ணிலவே 
நட்பூட்டி வளர்கின்ற 
வெண்ணிலவே 

பிறந்தநாள் வாழ்த்துக்கள். உமா கணேஷ் ...













Saturday, December 3, 2011

காதல் என்ற வார்த்தைக்கு 
என்ன பலமோ?
காதலி புன்னகைக்கு
என்ன திடமோ?
தள்ளப் பட்டுவிட்டேன் 
காதலில்
அவளின் பார்வைக்கு 
என்னத் திறமோ?
மயங்கிப் போயிருக்கேன் 
போதையில்.

Saturday, November 5, 2011

பெண்ணல்ல அவள்தான் பெண் 
பூவல்ல இவள்தான் பூ 
தோழியல்ல இவள்தான் தோழி 
ஆணல்ல ஈடு இவளுக்கு 
பாசம் வைப்பதுவில் எந்தன் மேல் 
கேசம் களைந்து கிடப்பதும் 
முகம் கலை இழந்து இருப்பதும் 
சோர்ந்து துவள்கின்ற தருணமும் 
நான் சார்ந்து இருப்பது 
என் தோழியை 
பூமுகம் பார்த்தால் புத்துணர்ச்சி 
அறிவுரையில் தன்முயற்சி 
ஊருக்கேக் காழ்ப்புணர்ச்சி 
எனக்கு கிடைத்த நண்பியைப்போல் 
வேறு யாருக்கும் கிடைக்கலையே.


கிளிவுன்னுடன் பேச வேண்டும்
பூ உன்னைத் தீண்ட வேண்டும் 
பா உன்னைப் பாட வேண்டும் 
நாவினால் சுவைக்க வேண்டும் 
சினுங்களை ரசிக்க வேண்டும் 
முனகலைக் கேட்க வேண்டும் 
நடக்கையில் உன் கையுரச வேண்டும் 
சூடேற இதமதில் மிதக்க வேண்டும் 
மழையினில் உன்னுடனே 
ஒர்குடையில் வலம் வேண்டும் 
மழை நின்றாலும் அன்பதுவில் 
நனைய வேண்டும் 
இதற்கு நீ வேண்டும் 
என்னுடைய காதலியாய் 

காதலிப்பாயா காதலியே?

Wednesday, October 19, 2011

பேனா :

எழுதப் பல பேனா உண்டு

பெண்ணை எழுத எந்தப் பேனா
உலறாமல் எழுதும்?


மாது மது :


மாதுவினால்  மதுவிடமும்

மதுவினால் மாதுவிடமும்
உலறுகின்றவன் ஆண் ..

பாடை :


ஏழை எனக்கு பல்லக்கு கட்டி

மரியாதைக் கொடுத்தது
மரணம்

வாடை :


வடை பிடிக்கிறதா சாப்பிடு

சமைத்தவரின் மேல் சாதி
வாடைப் பிடிக்காதே

கண் :


ஆணுடைய கொல்லும் ஆயுதம் "GUN "

பெண்ணுடைய கொல்லும் ஆயுதம் "கண் "

மண் :


மண்ணைத் தின்னாதே மழலையே

மண் மீண்டும் உனைத் தின்னும்

வெட்கம் :


நகம் கடிப்பவள்தான் என்று

விரல் கொடுக்காதே விரலே இருக்காது
அவ்வளவு வெட்கம் தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு
ஆணைக் கண்டால்

காலனி ஆதிக்கம் :


மீண்டும் நம் நாட்டில் காலனி ஆதிக்கம்

நான் வாழும் காலனியில்
புதிதாய் இரண்டுப் பெண்கள்

பூ விற்கும் பூ :


முழம் அளவிற்கு

அவள் கையில்லை
இருந்தும் முழம்போட்டு விற்கிறாள்
நடுரோட்டில் சிறுமி


Tuesday, October 18, 2011

மௌனம்

 



உன்னோடு பேசி கதைத்த
காலங்களில் காதால் உன் சத்தம் கேட்டேன்

உன்னை காண இன்று

என்னைச் சுற்று சத்தங்களின்
இரைச்சலுக்கு இடையே
உன் மௌனம் கேட்கிறேன்...

என் இனியவளே...

காலங்காலமாக
காத்திருந்தேன்
எனக்காக...

உன்னை கண்டு
பேசி பழகி
கதைத்து சிரித்த பொழுது
காத்திருந்தது
நமக்காக...

உன்னை காணாத இன்று

உன் மன
கரை தொட்ட அலை
கடல் திரும்பாமல்
காத்திருப்பது...

உனக்கா என்று

வாய்திறந்தால் தான்
அறிவாயோ!
என் இனியவளே...