Wednesday, July 13, 2011

தேனம்மை லெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..

தேன் கவியே தேனம்மை
நான் கூவியே குயிலும்மை
வாழ்த்த வந்திருக்கேன்
இவ்விடத்தில்

கவிதைகள் பிறக்கின்றது

கவிதைக்கு கவியெழுத
எத்துனைதான் பிறந்தாலும்
இணையில்லை உந்தனுக்கு

என்ன நான் பரிசளிப்பேன்

பூவுன்னை மிஞ்சியதொரு பூவில்லை
இப்பூவுலகில்
தேன் உன்னை தாண்டியதோர்
ஏன் சுவை இல்லை இவ்வுலகில்?
வலை வீசித் தேடினாலும்
அழகுச்சிலை இல்லை உன்னை மிஞ்ச
பல நல்லிதையங்கள் கூடுதிங்கே
பண்பாளர் உமக்கு
பிறந்தநாள்
வாழ்த்தளிக்க..!


தேனம்மை லெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..

Thursday, July 7, 2011

இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாணி மல்லிகை ..

வானில் மல்லிகை
வீசும் உன் புன்னகை
எங்கிலும் மரங்கள்
நிழல் கரங்களில்
நின்னை தீண்ட வரும்
பேசா பூக்களெல்லாம்
உன்னுடன் பேசிடவே
நேரம் கேட்டு நிற்கும்....

வளைந்து நெலிந்த ஆறுகளோ
குழைந்து வரும் உன்னை நீராட்ட...

அன்னையர் நிலவைகாட்டி சோறூட்ட
அன்னைபோல் நிலவே வரும் உனக்கு சோறூட்ட..

தென்றல் வரும் தேரோட்ட
மயில் வரும் இறகில் சீராட்ட
குயில்களும் உன்னை தாலாட்ட
புயல்களும் கொஞ்சி சிரிப்பூட்ட
கயல்களும் கண்ணில் நீந்தி வரும்
பிறை சந்திரன்
உன் புன்னகையில் பூத்திருக்கும்...

ஹா ஹா ஹா ஹா
யார் வரினும் போயினும்
மனிதன் நான் சுயநலவாதி
இயற்கை எழிலெல்லாம் உன்னை
தேடி நிற்க
உன்னை என் இதயத்தில்
பூட்டி வைத்து பொய் சொல்வேன்
எனக்கு தெரியவில்லை
அவர்கள் எங்கே என்று.
நல்லா தேடித் பாருங்க
பூக்களுக்குள் ஒளிந்திருக்காங்களோ
என்னவோவென்று...

இனிய தோழிக்கு
எளியன் கலாவின்
பனியின் துளிகள் போல்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சில்வியா..

சில்வியா
கொஞ்சம் சொல்வியா?
எப்படி இணைந்தோம் நட்பினிலே?
சில்வியா கொஞ்சும்
செல்வியா பூக்களுக்கு?
அன்பின் கல்வியா
கற்றுத்தரும்
சில்வியா..?

களவானியா நான்
கொஞ்சம் களவாடவா?
உன் இரத்தின இதயத்தை
நட்புக்கு
முடி சூட்ட.

புன்னகை பூக்கும்
பூங்கிளியே
பொன்னகை
கடன் கேட்கிறது
உன்னிடமே..

என்ன பொலிவு
பூ முகத்தில்
வைரத்தின்
விலையும் மலிவு
நீ சிரிக்கையிலே...

நாயன இசையே
ரொம்ப பிடிக்கின்ற பசையே
கரைந்து அழைக்கின்ற
காகம் நீ
என்னில் மறைந்திருக்கும்
ஒரு பாகம் நீ...

ஆழிதயம் குடைந்து சென்ற
எலியாவாய்
பிரிந்து சென்றால்
பெரு வலியாவாய்
பறந்து செல்லும் கிளியல்லோ
நீ நடந்து செல்லும்
வான் வளியல்லோ
சந்திரன் பாருன் புன்னகையில்
கதிரவன் பாருன் மூக்குத்தியில்
சிதறும் நட்சத்திர
சிரிப்பல்லோ
பூக்கள்
சினம் கொண்டெழுகிறது...

நீ போட்டியிட
எனக்குத்தானே தெரியும்
நீ நிலவுக்கே
பாட்டி
அழகிலென்று
சில்லு வண்டே
நீ
தில்லு கொண்டே
இங்கு
அடித்து நொறுக்குறியே
அப்பளத்தை
என்ன ஒரு திடம்
ஹ ஹ ஹ...

மெல்லிய மனம்
தினம் தினம்
எல்லா கனம் கனம் - எங்கே
இவள்
காணும் காணும் என்று நிற்காமல்
உன்னைத் தேடித் திரிகின்ற கடிகாரம்
உன்னால் மோட்சம் வேண்டும்

இனிப்பு பலகாரம்
எழிலே ஏற்கமுடியா சிங்காரம்
பேச்சிலே காரம் சாரம்
அறுசுவை உணவு
உன் வார்த்தைகள்
உமிழ்ப்பதில் நல்லாரம்
1
2
3
4
5
6
7
8
9
10
என்று தானே
எண்ணிக் கொண்டிருந்தேன்..

இப்பொழுது எப்பொழுதும்
ஏனோ
உன்னையே எண்ணுகிறேன்
எண்ணங்களில் நிறைந்தவரே
பல வண்ணங்களாய் ஓடித்திரிய
ஆட்டுக்குட்டி போல் என்னுள்ளே
கொய்ந்த சில்வியா பிறந்தநாள் வாழ்த்துக்கள்மே மே மே மே...